Breaking News

பிக்குமார்களுக்கு கொவிட் -19 பொதிகள்.


(கியாஸ் ஷாபி)

இலங்கை - சீன பௌத்த நட்புறவு சங்கத்தினால் வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் கொவிட்-19 மூலம் பாதிக்கப்பட்டுள்ள பௌத்த பிக்குமார்களுக்கு வழங்கும் நிகழ்வு இன்று(23) நடைபெற்றது.

இவ் உலர் உணவுப் பொதிகளை   கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பொலிஸ் விசேட அதிரடிப் பிரிவினரிடம் வழங்கிவைத்தார்.   

இலங்கை சீன பௌத்த நட்புறவு சங்கத்திடம் கிழக்கு மாகாண ஆளுநரின் வேண்டுகோளிற்கினங்க, இந்த பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கு முன்னர் அம்பாரை மாவட்டத்தில் இவ்வாறு வழங்கப்பட்ட உணவுப் பொதிகள் பொலிஸ் விசேட அதிரடிப் பிரிவினர் மூலம் உரிய விஹாரைகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித்த பிவனசிங்க, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக் ஆகியோர் பங்கேற்றனர்.


No comments