கிண்ணியாவில் 26 பேருக்கு அன்டிஜென் பரிசோதனை
(கியாஸ் ஷாபி)
கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று (24) இரவு 26 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா அன்டிஜென் பிரிசோதனையில் எவரும் கொரோனா தொற்றாளராக அறியப்படவில்லை என கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் A.M.M.அஜித் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இன்றைய பரிசோதனைக்காக கடந்த 2020.12.19 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட
பீசிஆர் மற்றும் அன்டிஜென் பரிசோதனையில் தொற்றாளராக இனங்காணப்பட்ட ஒருவர், கலந்து கொண்ட திருமண நிகழ்வில் சம்மந்தப்பட்டவர்களும் மற்றும் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்களுமே அழைக்கப்பட்டிருந்தனர் என்றும் எமது பகுதியில் தொற்றுக்குள்ளான எட்டுப் பேரோடு, நோயை மட்டுப்படுத்துவதற்கு பொது மக்களின் அர்ப்பணிப்பும் பொறுப்புணர்வு இன்றியமையாதது என்றும் தெரிவித்தார்.






No comments