ஹொப்டன் விக்னேஸ்வரா மாணவர்கள் சாதனை
பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட ஹொப்டன் விக்னேஸ்வரா தமிழ் வித்தியாலயத்தில் அண்மையில் வெளிவந்த தரம் 5புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி 11மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்று பரீட்சையில் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இவர்களில் பி.அகல்யா என்ற மாணவி 194 புள்ளிகளைப் பெற்று ஊவா மாகாணத்தில் தமிழ் பாடசாலைகளில் முதலிடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
தவிர, எம். ஹரிபிரசாத் 186, எம். சந்தீபன் 179, பி.கிஷான் 177, ஜி.பதூஷான் 175, டி.தர்ஷாயினி 172, எஸ்.சருஷி ரக்ஷன்யா 169, கே.யஸ்வின் 168, எஸ்.ஹர்ஷினி 164, வி.யுகாந்தினி 162, பி.ஜனபிரியன் 159 என புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
இவர்களையும் பாடசாலையின் முன்னாள் அதிபர் தியாகசுந்தரம், வகுப்பாசிரியர் என்.புவனேஸ்வரன் ஆகியோரையும் படங்களில் காணலாம். மாகாணத்திற்கு பெருமை சேர்த்த இவர்களை கல்வி சமூகம் பாராட்டுகின்றது.






No comments