Breaking News

மூதூரில் வர்த்தக நிலையங்களைத் திறப்பதற்கு அனுமதி

(என்.எம். புஹாரி) 

கொரோனா தொற்றுக் காரணமாக மூடப்பட்டுள்ள மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கிராமங்களிலுள்ள வர்த்தக நிலையங்களை நாளைய தினம் மாத்திரம் காலை 6.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணிவரை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாரக் தெரிவித்தார்.

அதேவேளை ஏனைய ஆறு நாட்களும் சகல வர்த்தக நிலையங்களை மூடப்பட வேண்டுமெனவும் அதன் பின்னர் மூதூர் கொரோனா தடுப்புச் செயலணி நிலமையினை கருத்தில் கொண்டு ஒரு தீர்மானத்தை எடுக்கும் எனவும் குறிப்பிட்டார். 

நாளை வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும் நேரத்தில் வீடுகளிலிருந்து ஒருவர் மாத்திரம் வெளியில் வந்து சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பொருட் கொள்வனவில் ஈடுபட வேண்டுமெனவும்,தேவையில்லாமல் வெளியில் செல்வதையும் தடுத்துக் கொள்ளுமாறும் தெரிவித்தார்.

மூதூரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சில கிராமங்களிலுள்ள வீதிகள் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேவை ஏற்பாடுமாயின் சட்டரீதியான முடக்கச் செயற்பாடு மேல்மட்டங்களோடு கலந்துரையாடி மேற்கொள்ளப்படுமெனவும் மேலும் தெரிவித்தார்.

மூதூர் கொரோனா தடுப்புச் செயலணியின் அவசரக் கூட்டம் இன்று (29) காலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் பிரதேச சபை தவிசாளர், மூதூர் சுகாதார பணிமனையின் வைத்தியர்,சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர், பொலிஸார், இரானுவத்தினர், கிராம உத்தியோகத்தர்கள், வர்த்தக சங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டதோடு இவர்கள் அனைவரும் சேர்ந்தே இத்தீர்மானத்தை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments