Breaking News

தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை ! மக்கள் கவலை




அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் தற்போது நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை சாதகமாகப் பயன்படுத்தி அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் குறித்து பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உணவு மற்றும் அத்தியவசிய பாவனைப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் நடந்து கொள்ளும் மனிதாபிமானற்ற ஈனச்செயல் குறித்து பிரதேச மக்கள் கடும் கண்டனம், கவலை தெரிவிக்கின்றனர்.

கொவிட் 19 நிலைமை காரணமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுகளில்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமுலிலுள்ளது.

இச்சந்தர்ப்பத்தை சந்தர்ப்பமாகப் பயன்டுத்தும் குறித்த சில வர்த்தகர்கள் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

நாட்டில் பொருட்களின் விலைகள் அதிகரிக்காத நிலையில். ஒரு கிலோவுக்கு ரூபா 20 முதல் ரூபா 100 வரை அதிகரித்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நெருக்கடி நிலையில் கொள்ளை இலாபம் உழைக்கும் பகற்கொள்ளையர்களை இனங்கண்டு, அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.

No comments