Breaking News

கிண்ணியாவில் மற்றுமொருவருக்கு கொரோனா தொற்று !

   



(கியாஸ் ஷாபி) 

கிண்ணியா, அண்ணல் நகர் பிரதேசத்தில் உள்ள ஒரு அரபிக் கல்லூரியைச் சேர்ந்த 15 மாணவிகளுக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில், எவருக்கும் கொரானா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.ஏ. அஜீத் இன்று (23) அதிகாலை  தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த சனிக்கிழமை (19) இறைச்சி வியாபாரத்தோடு, சம்மந்தப்பட்டவர்களும் கொழும்பில் இருந்து கிண்ணியாவுக்கு வந்தவர்களும்  என  43 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR மற்றும் அன்டிஜன்  பரிசோதனையின் பின்னர் ஆறு பேருக்கு  கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 

இந்த நிலையில், ஒரு கொரானா தொற்றாளரின் பிள்ளை இந்த அரபுக் கல்லூரிக்கு சென்று வந்திருந்ததனால், அந்த கல்லூரி மாணவிகளை கொரோனா அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தியிருந்தோம். எனினும் மாணவிகள் எவருக்கும் தொற்று உறுதிப்படுதப்படவில்லை. இருந்த போதும் அனைவரும் அவதானமாக இருக்குமாறு ஆலோசனை வழங்கியிருக்கிறோம் என்று தெரிவித்தார்.

அவர், மேலும் கருத்து தெரிவிக்கும் போது,  மூதூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருகின்ற கிண்ணியா, குட்டிக்கராச் பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு நேற்று (22) மாலை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அவரது குடும்பத்தினர் மற்றும் அயலவர்கள் என 15 பேருக்கு இன்று (22) நள்ளிரவு  அன்டிஜன் பரிசோதனையை மேற்கொண்டோம் எனத் தெரிவித்த அவர், எனினும் அதில் எவரும் தொற்றாளியாக இனங்காணப்படவில்லை என்றும் தெரிவித்தார். 

இதேவேளை, இன்று செவ்வாய்க்கிழமை (22) திருகோணமலை மற்றும் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 33 கொரோனா தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்

இன்று  காலை 8.00 மணி முதல் மாலை வரை அன்டிஜென் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட ஜமாலியா பகுதியில் 150 க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் நான்கு மாணவர்கள் உட்பட 12 குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை திருகோணமலை மரத்தடி சந்தியில் உள்ள தீயணைப்பு படை வீரர்கள் மூவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் நிவ் மூர் வீதியில் வசித்துவரும் தீயணைப்பு படை வீரரின் தாய் மற்றும் தந்தைக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கோயிலில் கடமையாற்றி வருபவர் எனவும் தெரியவருகின்றது.






 


No comments