கொட்டும் மழைக்கு மத்தியிலும் கவனயீர்ப்பு போரட்டம்

(கியாஸ் ஷாபி)
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கோரி, இன்று (27) கிண்ணியாவில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
இந்த போராட்டம் காலை 10.00 மணிக்கு கிண்ணியா மட்டக்களப்பு வீதி "T" சந்தியில் இருந்து ஆரம்பமாகி 11.30 மணிக்கு பிரதேச செயலகத்தில் நிறைவடைந்தது.
இதன்போது இளைஞர்கள், கொரோனா சுகாதார விதி முறைப்படி, சமூக இடைவெளியை பேணி, முக கவசம் அணிந்து , தங்களுடைய போராட்டத்தை நடாத்தினர்.
இரு கைகளிலும் வெள்ளை துணியை கட்டிவாறு, உரிமைக்காக எழுதப்பட்ட பல்வேறு பதாதைகளையும் ஏந்திக் கொண்டு இந்த போராட்டத்தை நடத்தினர்.
இறுதியாக பிரதேச செயலாளரிடம் மகஜரை ஒன்றும் கையளிக்கப்பட்டது.










No comments