Breaking News

கிண்ணியாவில் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி!

 

(கியாஸ் ஷாபி) 

மேலும் இரு கொரோனா தொற்றாளர்கள் கிண்ணியாவில் அடையாளங்காணப்பட்டிருப்பதாக கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி A.M.M.அஜித் தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்ட கிண்ணியா, அகமட் லேன் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்த அவர், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவினால், மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் பிரகாரம் ஏற்கெனவே 9 பேர் கொரோனா தொற்றாளியாக இனங்காணப்பட்டிருந்தார்கள் என்றும் நேற்று (27) மாலையோடு,  அந்த தொகை 11 ஆக அதிகரித்திருக்கின்றது என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, PCR பரிசோதனைக்காக  46 பேருடைய இரத்த மாதிரிகள் மட்டக்களப்பு கொரோனா மத்திய நிலையத்துக்கு நேற்றும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அதனுடைய பெறுபேறு நாளை (29) கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.  






No comments