Breaking News

மூதூரில் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம்!!

 


(எப்.முபாரக்) 

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயதான சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்தேக நபர் ஒருவரை இம்மாதம் 19ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் உத்தரவிட்டார்.

தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர், பெற்றோர்களுக்கு தெரியாமல் அவர்களது 14 வயதுடைய சிறுமியை அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக தெரிவித்து சிறுமியின் பெற்றோர் பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய, கைது செய்யப்பட்டு, பொலிசார் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சந்தேகநபருக்கு பிணையாளரை மிரட்டியமை, வீட்டை உடைத்து திருடியமை  மற்றும் திருட்டு பொருட்களை வைத்திருந்தமை போன்ற வழக்குகள் தொடர்பாக  நீதிமன்றத்தில் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்



No comments