Breaking News

கிண்ணியாவில் 15 நபர்களுக்கு PCR பரிசோதனை

 

(கியாஸ் ஷாபி)

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 15 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனயும் 11 பேருக்கு அன்டிஜென் பரிசோதனையும் நேற்று (2) செய்திருப்பதாக கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது, இந்தப் பரிசோதனை, இங்கு வியாபாரம் செய்கின்ற வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கும் கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த சிலருக்கும் செய்யப்பட்டது என்றும் அன்டிஜன் பரிசோதனையில் எவருக்கும் தொற்று இனங்காணப்படவில்லை என்றும் தெரிவித்த அவர்,  PCR பரிசோதனைக்காக 15 நபர்களின்  இரத்த மாதிரிகளும் மட்டக்களப்பு கொரோனா மத்திய நிலையத்துக்கு  அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.

இந்த PCR பரிசோதனை, காத்தான்குடியைச் சேர்ந்த வெளியூர் வர்த்தகர் 9 பேரும், அகமட் லேனைச் சேர்ந்த 5 பேரும், மாஞ்சோலைப் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் செய்து கொண்டனர். இதில் 13 ஆண்களும் 2 பெண்களும் அடங்குகின்றனர். இவர்கள் 14 - 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் தெரிவித்தார். 





 



No comments