Breaking News

ரவூப் ஹக்கீமுக்கு கோவிட் -19 தொற்று உறுதி!



(கியாஸ் ஷாபி)

பாராளமன்ற உறுப்பினர்  ரவூப் ஹக்கீமுக்கு  கோவிட் -19  தொற்று இருப்பதாக இன்று (10) உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர், தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு கருத்து வெளியிட்டுள்ளார். 

"நான் இன்று COVID-19 பரிசோதனை செய்தபோது தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் இன்றிலிருந்து தனிமைபடுத்தலுக்கு உள்ளாகிறேன். மேலும் கடந்த 10 நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தேவையான சுகாதார மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ”  என்று தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் கொரானா தொற்றுக்கு ஆளாகிய   2 வது எம்.பி. ரவூப் ஹக்கீம் ஆவார். முன்னதாக அமைச்சர் தயசிறி ஜெயசேகர கொரோனா தொற்றுக்கு ஆளாகி தற்போது தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளார்.

அமைச்சர் தயாசிரி ஜெயசேகராவோடு தொடர்புடைய 118 நெருங்கிய தொடர்பாளர்களான  அவரது குடும்ப உறுப்பினர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் ஐந்து மத குருமார்கள்  உட்பட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சரின் பிரத்தியேகச்  செயலாளர் ஒருவர் நேற்று  கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 



No comments