Breaking News

கந்தளாய் பிரதேசத்தில் 200 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


(கியாஸ் ஷாபி)

கந்தளாய் பிரதேசத்தில் உள்ள இரு பாடசாலைகளைச் சேர்ந்த 200 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள் என கந்தளாய் பிராந்திய வைத்திய அத்தியட்சகர் அலுவலகம் இன்று (21) அறிவித்துள்ளது. 

இவர்களோடு, அதிபர் ஒருவர் உட்பட ஐந்து ஆசிரியர்களும் தனிமைப்படுத்தலுக்கு  உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள். 

கந்தளாய் பகுதியைச் சேர்ந்த கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையில் பணிபுரியும் நபர் ஒருவருக்கு கொரானா தொற்று இன்று (21) உறுதிப்படுத்தப்பட்டது.

குறித்த நபர் கந்தளாய் பிரதேசத்துக்கு வந்து, தனியார் கல்வி நிலையங்களில் பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்திவந்திருக்கிறார். இதனால் அவரிடம் வகுப்புக்களுக்குச் சென்ற 200 மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இவருடைய முதன் நிலை தொடர்பாளர்களுக்கு அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, இவரது தந்தை மற்றும் சகோதரி ஆகிய இருவரும் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டிருக்கிறார்கள்  எனவும் கந்தளாய் பிராந்திய வைத்திய அத்தியட்சகர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. 





  


 


No comments