Breaking News

அன்டிஜென் பரிசோதனையில் எவருக்கும் தொற்று இல்லை.

(கியாஸ் ஷாபி)

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 11 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனயும் 10 பேருக்கு அன்டிஜென் பரிசோதனையும் இன்று (7) செய்திருப்பதாக கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது, இந்தப் பரிசோதனை, நேற்று (6) தொற்றாளர்களாக இனங்காணப்பட்டவர்களின் முதன் நிலை தொடர்பாளர்களுக்கும் தனிமை படுத்தப்பட்டிருப்பவர்களுக்கும் செய்யப்பட்டது என்றும் அன்டிஜன் பரிசோதனையில் எவருக்கும் தொற்று இனங்காணப்படவில்லை என்றும் தெரிவித்த அவர்,  PCR பரிசோதனைக்காக 11 நபர்களின்  இரத்த மாதிரிகளும் மட்டக்களப்பு கொரோனா மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.


No comments