Breaking News

கிண்ணியா பிரதேச செயலக ஊழியர்களின் உறுதி மொழி

 

(கியாஸ் ஷாபி) 

மக்களின் சேவைக்காக அர்ப்பணிபுடன் புத்தாண்டை பயன்படுத்துவோம் என்ற தொனிப்பொருளின் கீழ், சத்தியப் பிரமாணத்தை மேற்கொண்டு, இன்று (1) கிண்ணியா பிரதேச செயலக அரச ஊழியர்கள் அனைவரும்  தங்களுடைய பணியை ஆரம்பித்தனர்.

கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச். எம். கனி தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் எதிர்கால சந்ததிகளின் நிலையான அபிவிருத்திக்காகவும் நாட்டின் ஐக்கியத்திற்காகவும், புது வருடத்தில் ஊழல் அற்ற அரச பணியை உருவாக்குவோம் என்று ஊழியர்கள் அனைவரும் உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.




No comments