Breaking News

அம்பாறை- கல்முனை பிரதான வீதியில் துப்பாக்கிச் சூடு






இன்று அதிகாலை அம்பாறை- கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள ஒரு வாகன காட்சி அறையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இன்று அதிகாலை 3.00 மணியளவில் சந்தேக நபர் தானியங்கி ஆயுதத்துடன் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அம்பாறை போலீசார் தெரிவித்தனர்.

ஆயுதத்தை உரப் பையில் மறைத்து வைத்திருந்தவர், வாகன காட்சி அறையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர், பின்னர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றவர் சி.சி.டி.வி காட்சிகள் காட்டுகிறது.

தாக்குதலுக்கான காரணம் மற்றும் சந்தேக நபரின் விவரங்கள் இன்னும் பெறப்படவில்லை, அதே நேரத்தில் அம்பாறை  பாெலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனா்.


காட்சி அறையில் நுழைவாயிலில் உள்ள கண்ணாடிச் சுவர் முற்றிலுமாக சிதைந்துவிட்டதாகவும், துப்பாக்கிச் சூடு காரணமாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு கார் மற்றும் லாெறியும் சேதமடைந்துள்ளதாகவும் அதெரன  தெரிவித்துள்ளது.








No comments