Breaking News

பிரதேசவாசிகளால் கிண்ணியா கல்லடி வெட்டுவான் பாலம் புனர்நிர்மாணம்.

 

(கியாஸ் ஷாபி)

அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக இடிந்து விழுந்த கிண்ணியா கல்லடி வெட்டுவான் பாலத்தை நேற்று (3) பிரதேசவாசிகளும்  கிண்ணியா பிரதேச சபை ஊழியர்களும் சேர்ந்து புனர்நிர்மாணம் செய்தனர். 

இது தொடர்பாக கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் கருத்து தெரிவிக்கும் போது, கடந்த வாரம் பெய்த தொடர் மழையின் காரணமாக போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டதனால், அன்றாட போக்குவரத்துக்காக ஊர் மக்களும் விவசாயிகளும் மிகவும் சிரமப்பட்டனர்.

இந்த நிலையில், ஊர் மக்களின் பங்களிப்புடன் இவ்வீதியினை இன்று செப்பனிடுவதற்கு எனக்கும் அழைப்பு விடுத்தனர். நானும் எனது சில ஊழியர்களும் எங்களால் முடிந்த பொருட்களையும் அங்கு  எடுத்துச் சென்று, முழு மூச்சாக வேலை செய்து கொண்டிருந்த அந்த மக்களுக்கு உதவி செய்தோம் என்று தெரிவித்த அவர்,  உண்மையில் எமது பிரதேசத்திலுள்ள மக்கள் இவ்வாறு பங்களிப்புச் செய்தால் எவருடைய உதவியுமில்லாமல் அனைத்தையும் சாதிக்கலாம் என்றும் தெரிவித்தார். 



No comments