Breaking News

கிண்ணியாவில் கொரோனா பரிசோதனை


(கியாஸ் ஷாபி) 

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக  பகுதிகளைச் சேர்ந்த 18 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனயும் 11 பேருக்கு அன்டிஜென் பரிசோதனையும் நேற்று (01)  செய்திருப்பதாக கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்தார்.

அவர், மேலும் கருத்து தெரிவிக்கையில், பி.சி.ஆர். பரிசோதனைக்கு பொதுமக்கள் 13 பேரும் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் 5 பேரும் உள்வாங்கப்பட்டனர். அன்டிஜென் பரிசோதனைக்கு 5 பொலிஸாரும் 6 பொது மக்களும் உள்வாங்கப்பட்டனர். எனினும் இதில் எவருக்கும் கொரானா தொற்று உறுதியாகவில்லை என்று தெரிவித்த அவர், பி.சி, ஆர் பரிசோதனைக்காக இரத்த மாதிரிகள் மட்டக்களப்பு கொரானா மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார் .

No comments