Breaking News

கிண்ணியாவில் மேலும் ஒன்பது நபர்களுக்கு கொரோனா!

 


( கியாஸ் ஷாபி ) 

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் இருந்து இன்று (14) ஒன்பது நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி சற்று முன்னர்  தெரிவித்தார்.

இது குறித்து அவர், மேலும் கருத்து தெரிவிக்கையில்,  இதில் இருவர் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் மூலம் தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ள அதேவேளை,. ஏனைய 7 நபர்களும் எங்களால் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டனர்.

இவர்கள் யாவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, மாஞ்சோலைச்சேனை கிராம சேவகர் பிரிவின் அண்ணல் நகர் வீதியைச் சேர்ந்தவர்களாகும் என்றும் தெரிவித்தார்.

இதன் மூலம், அடுத்தடுத்துள்ள இரு கிராம சேவகர் பிரிவுகளில் தொற்றார்கள் இனங்காணப்பட்டிருப்பது, அதிக அவதானத்தைக் செலுத்த வேண்டிய நிலையை உருவாக்கியிருக்கிறது என்று தெரிவித்த அவர்,

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில்  பெஹலியகொட மீன் சந்தையில் இருந்து ஆரம்பித்த 2வது கொரோனா அலைக்குப் பின்னர் மொத்தமாக 51  நபர்கள் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.


No comments