கிண்ணியா மத்திய கல்லூரிக்கு அறுவர் நியமனம்.
தேசிய கல்வி கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கான கல்வி அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்ட தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரிய நியமனங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், கிண்ணியா மத்திய கல்லூரிக்காக நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்களை இன்று கல்லூரி அதிபர் எஸ்.எம்.எம். அனிபா வழங்கி வைத்தார்.
கிண்ணியா தேசிய கல்லூரிக்கு நியமனம் பெற்ற ஆரம்ப, விஞ்ஞான மற்றும் தமிழ் பாடத்திற்காக தலா இருவர் வீதம் மொத்தம் 6 ஆசிரியர்கள் இந்த நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.
இவர்கள் 18.01.2021 ஆம் திகதி திங்கட்கிழமை தங்கள் பொறுப்புக்களை கடமையேற்றுக் கொள்வார்கள்.






No comments