Breaking News

கிழக்கு மாகாண வருடாந்த இடமாற்றங்கள் இடைநிறுத்தம்!


கிழக்கு மாகாண வருடாந்த இடமாற்றங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தம்.

கிழக்கு மாகாணத்தில் 2021ம் ஆண்டின் அரச இணைந்த சேவைக்கான வருடாந்த இடமாற்றங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் 18/01/2021இலிருந்து இடம்பெறவிருந்த மாகாண இடமாற்றங்கள் அனைத்தும் ஆளுநரின் பணிப்புரைக்கமைய தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மாகாணத்தில் நிலவும் கொரோனா நிலைமை காரணமாக அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், கிழக்கு மாகாணத்தில் பரவலான பகுதிகள் முடக்கப்படுவதால் இதனை முறையாகச் செய்வதற்கு முடியாத காரணத்தால் அனைத்து இட மாற்றங்களையும் தற்காலிகமாக நிறுத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பணிப்புரை விடுத்துள்ளார்.


No comments