Breaking News

திருகோணமலையில் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

 


(கியாஸ் ஷாபி) 

திருகோணமலை கொட்பே மீன்பிடி துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இந்த துறைமுகம் பல ஆண்டுகளாக பழுதுபார்க்கப்படவில்லை. இதன் காரணமாக ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களும் மீன் ஏற்றுமதியாளர்களும் உள்ள பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.


இந்த நிலையில் இவற்றை அபிவிருத்தி செய்யும் பொருட்டு, திருகோணமலை மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரள நேற்று (13) துறைமுக வளாகத்திற்கு விஜயம் செய்து, அவற்றை  பார்வைையிட்டார்..


இதன்போது, கருத்து தெரிவித்த பாராளமன்ற உறுப்பினர்,

திருமலை மாவட்டத்தின் அபிபிருத்தி குறித்து, ஜனாதிபதி என்னை நேரடியாக அழைத்து கலந்துரையாடியுள்ளார். திருகோணமலை துறைமுகம் மற்றும் கொட்பே மீன் பிடித்துறைமுகம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்து, 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என்று தெரிவித்தார்.(News Time Tamil)    




No comments