குடிநீர் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்
(கியாஸ் ஷாபி)
திருகோணமலை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை நிலவும் பிரதேங்களுக்கு குடிநீர் வழங்கல் தொடர்பான கலந்துரையாடல் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான கபில நுவன் அத்துக்கோரல தலைமையில் நேற்று (05) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்டத்தில் குடிநீர் வசதியற்ற பிரதேசங்களை இனங்கண்டு அப்பிரதேச வாழ் மக்களுக்கு குடிநீரை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பதே இக்கலந்துரையாடலின் பிரதான நோக்கமாக அமையப்பெற்றது.
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் திருகோணமலை மாவட்டத்தில் எவ்வித வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் வழங்கப்படும் என்று இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள, நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய துறைசார் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.






No comments