Breaking News

காலடிக்குச் சென்று பிறப்புச் சான்றிதழ் வழங்கி வைப்பு




(பொன்ஆனந்தம்)

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாட்டாளிபுரம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் பிறப்புச் சான்றிதழ் இல்லாதோருக்கு காலடிக்குச் சென்றும் இலவசமாக பிறப்புச் சான்றிதழ் வழங்கி வைப்பதற்கான நடமாடும்சேவை பாட்டாளிபுரம் பல்தேவை கட்டிடத்தில் இன்று (17) இடம்பெற்றது.


மூதூர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டிலும் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் அனுசரணையிலும் இவ் நடமாடும் சேவை மிகச்சிறப்பாக இடம்பெற்றது. குறித்த நிறுவனத்தினால் இதற்கு முன்னரும் கிராமப்புற மக்களின் நலன்கருதி பல நடமாாடும் சேேவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.


இந்நிகழ்வில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாரக், பிரதேச செயலக நிறுவாக உத்தியோகத்தர் ஏ.அலாவுதீன், நிருவாக கிராம உத்தியோகத்தர் கே.எம்.ஜறூஸ், இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் பொண்.சற்சிவானந்தம், மாவட்ட பதிவாளர் உள்ளிட்டோரும் பொருளாதார அபிவிருத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

No comments