Breaking News

திருகோணமலை மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம்!

 


(கியாஸ் ஷாபி)

கிண்ணியா தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 79 வயதான ஆண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால், உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்றினால் திருகோணமலை மாவட்டத்தில் நிகழ்ந்த முதலாவது மரணம் இதுவாகும்.

இது குறித்து, மேலும் வைத்தியசாலை நிர்வாகம் கருத்து தெரிவிக்கையில்,  சளி மற்றும் சுவாச பிரச்சினை காரணமாக கடந்த 19 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சாதாரண நோயாளர் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதனால், கடந்த 21 ஆம் திகதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இங்கு, விஷேட வைத்திய நிபுனரின் ஆலோசனைக்கினங்க, இவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது என்றும் இதன் பெறுபேறாக இவருக்கு அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் இவர் வைத்தியசாலையின் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட விடுதிக்கு மாற்றப்பட்டு, சிகிச்சையளிக்க்பபட்டு வந்தது. 

இதேவேளை, நேற்று இவரது இரத்த மாதிரிகள் PCR பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி மேற்கொள்ளப்பட்ட போது, இவருக்கான கொரோனா தொற்று மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. என்றும் இந்த நிலையில் இன்று காலை இவர் மரணமானார் என்றும்  அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன . 



  



    




 


No comments