வர்த்தமானியின் ஊடாக அறிவிக்குமாறு கோரிக்கை
கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் நேற்று (10) வெளியிட்ட கருத்தை, வர்த்தமானியின் ஊடாக அறிவிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் S.M.மரிக்கார் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நீரில் கொவிட் வைரஸ் பரவாது என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளதாக அவர் நினைவூட்டினார்.
நீரில் கொவிட் வைரஸ் பரவாது என்றால், அடக்கம் செய்வதற்கு ஏன் அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தான் பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பிய சந்தர்ப்பத்தில், ”அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும்” என அவர் பதிலளித்ததாகவும் S.M..மரிக்கார் கூறினார்.






No comments