Breaking News

திருகோணமலையில் "சுபீட்சம்" வார இதழின் வெளியீட்டு விழா

 


(பொன். ஆனந்தம்) 

திருகோணமலையில் சுபீட்சம் வார இதழின் வெளியீட்டு விழா மிகவும் சிறப்பான முறையில் நேற்று (19) மதப்பெரியார்களின் ஆசியுரையுடனும் தமிழ்தாய் வாழ்த்துப்பாவுடனும் நடைபெற்றது.  

சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன். சற்சிவானந்தம் தலைமையில் நகர மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதல் பிரதி ஆன்மீக பெரியார் களிடமிருந்து நகர சபைத்தலைவர் நா. இராசநாயகம் பெற்றுக்கொண்டார்.


அதனையடுத்து வருகைதந்திருந்த இலக்கியவாதிகள், கல்வியாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் போன்றோருக்கும் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில் இலக்கிய வாதியும் மூத்த ஊடகவியலாளருமான திருமலை நவம், நீங்களும் எழுதலாம் சஞ்சிகையின் ஆசிரியர் எஸ். ஆர். தனபாலசிங்கம், ஆய்வாளர் யதீந்திரா, உள்ளிட்ட பலரும் உரையாற்றினர். 


தலமையுரையை சற்சிவானந்தமும், நன்றியரையை க. திருச்செல்வம் நிகழ்த்தினார்கள். வணக்கத்திற்குரியவர்களான அருட்தந்தை எழில் அவர்களும், அருண்குருக்கள் அவர்களும் ஆசியுரை வழங்கி யிருந்தனர்.

இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர். சி. தண்டாயுதபாணி, ஈபிடிபி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஆ. புஸ்பராஜா, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்கட்சியின் திருமலை அமைப்பாளர். கு. நளினகாந்தன், உள்ளிட்ட அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி தொகுப்பை நகரசபை உறுப்பினரும் தமிழர்விடுதலைக்கூட்டணி பிரமுகருமான க. பிரகாஷ் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments