Breaking News

பொதுஜன கல்வி சேவை சங்கத்தின் திருகோணமலை மாவட்ட சம்மேளனத்தின் கூட்டம்

  


ஸ்ரீலங்கா பொதுஜன கல்வி சேவை சங்கத்தின் திருகோணமலை மாவட்ட சம்மேளனத்தின் விசேட கூட்டம்  திருகோணமலை உப்புவெளி பிரதேச சபை  மண்டபத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரும் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஸ அவர்களது வழிகாட்டலில் கட்சியின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் நிமல் காமினி  தலமையில் இடம்பெற்றது.


ஸ்ரீலங்கா பொதுஜன கல்வி சேவை சங்கத்தின் தலைவி திருமதி. வசந்தா கந்தபான் கொட பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன கல்வி சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர்  அணில் வீரசிங்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்விற்கு திருகோணமலை, சேருவல, மூதூர் மற்றும்  தொகுதிகளைச் சேர்ந்த  அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


அதிபர்கள், ஆசிரியர்களால் ஒப்படைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் மற்றும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மிக விரைவாக அவற்றிற்கான தீர்வுகள் பொதுஜன பெரமுன கல்விச் சேவைச் சங்கத்தின் ஊடாக வழங்கப்படுமென கட்சியின் மாவட்ட இணைப்பாளர்  நிமல்காமினி இதன்போது தெரிவித்தார்




No comments