அனைத்து குடிநீர் பிரச்சினைகளுக்கும் ஒரு வருடத்தில் தீர்வு.
திருகோணமலை மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கி வரும் குடிநீர் சம்மந்தமான பிரச்சினைகள் அனைத்தும் ஒரு வருட காலத்துக்குள் நிவர்த்தி செய்யப்பட்டுவிடும் என நீர் வழங்கல் வடிகான் அமைப்பு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தா தெரிவித்தார்.
இன்று (14) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பொது மக்கள் நடமாடும் சேவையில் மக்கள் குடிநீர் சம்மந்தமாக முன்வைத்த பிரச்சினைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரள, மாவட்ட செயலாளர், நீர் வழங்கல் வடிகான் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். (New Time Tamil)







No comments