கிண்ணியா அக்செரியன் சூப்பர் லீக் முதலாவது போட்டி சமநிலையில் முடிவு
(கியாஸ் ஷாபி)
கிண்ணியா அல் அக்ஸா கல்லூரியில் கல்வி கற்று கடந்த காலங்களில் விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து கல்லூரிக்கு பெருமை தேடிக் கொடுத்த வீரர்களை உள்ளடக்கிய அணிகளுக்கிடையிலான அக்செரியன் சூப்பர் லீக் உதைப்பந்தாட்ட போட்டியின் ஆரம்ப வைபவமும் முதலாவது போட்டியும் இன்று (11) கிண்ணியா எழிலரங்கு மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த வைபவம் அக்செரியன் சுப்பர் லீக்கின் ஸ்தாபகரும் கிண்ணியா பிரதேச உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஏ.எல்.முகமட் நபில் தலைைமையில் நடைபெற்றது.
எட்டு கால்பந்தாட்ட அணிகள் மோதவுள்ள இந்த தொடரின் இன்றைய முதன் நாள் ஆட்டத்தில் அக்செரியன் புளு ஈக்கிள் (Blue Eagles) அணியும் அக்செரியன் ப்ளெக் பெண்தர்ஸ் (Black Panthers) அணியும் மோதியது.
இறுதி வரை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், எந்த அணியும் கோல் எதனையும் போடவில்லை. இதன் காரணமாக போட்டி சமநிலையில் முடிந்தது.
இன்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராக பிளெக் பெண்தர்ஸ் அணி வீரர் முகம்மது நஹ்திர் தெரிவு செய்யப்பட்டார்.
இன்றைய நிகழ்வில், போட்டியின் பிரதான அனுசரணையாளரான பாராளமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
மேலும் கிண்ணியா பிரதேச செயலாளர், கிண்ணியா பொலிஸ் பொறுப்பதிகாரி, கிண்ணியா நகர சபைத் தலைவர், பொதுசன பெரமுன மூதூர் தொகுதி இணைப்பாளர், கிண்ணியா உலமா சபைத் தலைவர், திருகோணமலை உதைப்பந்தாட்ட சம்மேளன செயலாளர் , கிண்ணியா உதைப்பந்தாட்ட சம்மேளன செயலாளர் மற்றும் இணை அனுசரணை வழங்கிய மைலோ நிறுவன அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த தொடரில் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெறும் அணிகளுக்கு முறையே தலா 50,000 40,000, 30,000 ஆயிரம் ரூபா பணப்பரிசும் கிண்ணமும் வழங்கப்படவுள்ளன.
நான்காம் இடத்தைப் பெறும் அணிக்கு 20 ஆயிரம் ரூபா பணப்பரிசும் போட்டியில் பங்கு கொண்ட ஏனைய அணிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபா பணப்பரிசும் வழங்கப்படவுள்ளது.
தொடரின் சிறப்பாட்டக்காரருக்கு மௌண்டன் பைசிகள் ஒன்றும் கேடயமும் வழங்கப்படவுள்ளதோடு, தொடரின் சிறந்த கோல் காப்பாளராக தெரிவு செய்யப்படுபவருக்கு 5,000 பணப் பரிசும் கேடயமும் வழங்கப்படவுள்ளது.
இதில் பங்குகொள்ளும் அணிகள் மற்றும் தலைவர்களின் விபரங்கள்.
வொரீஸ் ( worries) - என்.எம்.சிபான்
ஜூபிடர்ஸ் (Jupiters) - எம்.எம். றோசான்
சுப்பர் கிங் (Super Kings) - ரீ.எம். றோஹான்
சுப்பர் போய்ஸ் (Super Boys) - எஸ்.எஸ்.இம்பாஸ்
சுப்பர் பைட்டர் (Super fighter) - என்.எம்.றிபாஸ்
புளு ஈக்கிள் (Blue Eagle) - ரீ.எம்.ரோசான்
ப்ளெக் பெண்தர்ஸ் (Black Panthers) - ஐ.எம்.றிம்சான்
றேசின் ஸ்டார்ஸ் (Racing Stars) - எம்.ஆர்.ஆர்.எம்.ஹிசாம்.










No comments