Breaking News

கிளிநொச்சியில் கிராமிய விளையாட்டு மைதானம்.

 


கிராமிய மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும்  332 பிரதேச செயலகங்களில் உள்ள கிராமங்களில் கிராமிய விளையாட்டு மைதானம் அமைத்தல் தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (2) கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் கீழான மலையாளபுரம் புதிய பாரதி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.


நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டி சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.



நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் கரைச்சி பிரதேச செயலர் ஜெயகரன், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைப்பாளர் றுசாங்கன்  தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவிப்பணிப்பாளர் உட்பட மாவட்டச்செயலக பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கிராம அலுவலர், விளையாட்டுக்கழக அங்கத்தவர்கள் கிராம மக்கள் என பலர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். www.newstimetamil.com




No comments