Breaking News

மூதூர் கட்டழகர் தேசிய மட்டத்துக்கு தெரிவு

 


மூதூர் தக்வா நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் பஹ்ரியா நகரைச் சேர்ந்த லத்தீப் முகம்மது நஸ்ரின், கடந்த 2021.03.06ஆம் திகதி திருகோணமலை நகராட்சி மண்டபத்தில் இடம்பெற்ற மாகாண மட்ட 70Kg கட்டழகர் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று தேசிய ரீதியான கட்டழகர் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இவரது சாதனையை கௌரவித்து தேசிய ரீதியிலும் வெற்றிபெற ஊக்கமளிக்கும் வகையில் இன்று (2021.03.15) பிரதேச  எம்.பி.எம். முபாறக்  தலைமையில் அனைத்து பிரதேச செயலக உத்தியோகத்தர்களினுடைய பங்குபற்றுதலுடன் நினைவுச் சின்னம் வழங்கி  கௌரவிக்கப்பட்டது. 

www.newstimetamil.com

No comments