உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு அறிக்கையில் இருந்து...
மாவனல்லை சிலை உடைப்பு நடந்தது எப்படி? தொடர் - 5
தமிழில் ஏ.ஆர்.ஏ.பரீல்
பின்பு சாதிக் மட்டும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் நீர்கொழும்பில் உள்ள வீடொன்றுக்கு (ரில்வானுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சஹ்ரான் வாடகைக்கு பெற்றிருந்த வீடு) அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு சியோன் தேவாலய குண்டுதாரி ஆசாத் மட்டும் ரில்வான் ஆகியோர் இந்த வீட்டில் தங்கி உள்ளனர்.
2019 ஜனவரி 16ஆம் திகதி வணாத்த வில்லுவில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்படும் வரை இந்த நீர்கொழும்பு வீட்டிலேயே இருந்துள்ளார். பயிற்சிகளை வழங்குவதற்கு சாதிக் மூலம் காணி ஒன்றினை தேடிக்கொள்ளும் அவசியம் சஹ்ரானுக்கு இருந்தது.
இதேவேளை சாதிக்கும் மில்கானும் ஆட்டுப் பண்ணை ஒன்றினை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டிருந்தார்கள். இது தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்காக சாதிக் வணாத்தவில்லுவில் காணி ஒன்றுள்ள மூபீஸ் என்பவரை தொடர்பு கொண்டு கதைத்துள்ளார். தனது காணியில் (10 ஏக்கர்) ஒதுக்கித் தருவதாக முபீஸ் இனங்கியுள்ளார்.
இந்த காணிக்கு வேலி ஒன்று அமைக்கப்பட்டதும் சிரியாவில் காலமான நிலாமை நினைவு கூறுவதற்காக சஹ்ரான் அந்த இடத்தை அபூ சுரையா என பெயரிட்டார்.
ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த வணாத்தவில்லு காணி, பயிற்சி முகாமாகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்தப் பிரதேசம் கண்டு பிடிக்கப்பட்டமை மாவனல்ல சம்பவம் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகும். இது இரகசிய பொலிஸாருக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும். இந்த விசாரணைப் பணிகளில் ஈடுபட்ட விசாரணை அதிகாரிகள் பாராட்டப்பட்டார்கள்.
சாதிக் மட்டும் சாஹிட் ஆகிய இருவரையும் பாதுகாப்பு பிரிவினர் தேடிக் கொண்டிருந்தபோது வணாத்தவில்லு கண்டுபிடிக்கப்பட்டது. சாதிக்கும் சாஹிட்டும் புத்தளத்தில் இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்தது.
2019 ஜனவரி 23ஆம் தேதி ஆகும் போது வணாத்தவில்லு வெடிபொருட்கள் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து இது தொடர்பில் சஹ்ரானின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
சாதிக்கின் சாட்சியங்களின் படி வணாத்தவில்லுவில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, சஹ்ரானினால், தற்கொலைத் தாக்குதல் திட்டம் விரைவுபடுத்த பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மாவனல்லை சம்பவத்திற்கு பொறுப்பாக இருந்த விசாரணை அதிகாரியான கேகாலை உதவி பொலிஸ் அத்தியட்சர் கமல் பெரேரா 2018 டிசம்பர் 28-ஆம் தேதி குற்றவியல் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சானிஅபேசேகரவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் குழுவுக்கு சர்வதேச தொடர்பு இருக்கிறதா என்பது தொடர்பில் சர்வதேச விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சர்வதேசிய பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்க முடியும் என அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
கடிதத்திற்கு 2019 ஜனவரி 29ம் தேதி குற்றவியல் விசாரணை திணைக்கள பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சானி அபேசேகரா பதில் அனுப்பியிருந்தார்.
அந்த கடிதத்தில், சூழ்ச்சிகள் தொடர்பில் எவ்வித விபரங்களும் இல்லாதவிடத்து, அதனை திட்டமிட்டிருக்கும் நாடு மற்றும் நடத்தியுள்ள முறைமை தொடர்பில் எவ்வித விபரங்களும் இல்லாதபோது சர்வதேச போலீஸ் உதவியை பெற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிடப்பட்டிருந்தது.
சஹ்ரான் ஐ.எஸ் கொள்கைகளை பிரச்சாரம் செய்யும் மற்றும் இலங்கைக்குள் ஐ .எஸ் போன்ற தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கு இளைஞர்களை ஊக்குவிக்கும் அடிப்படைவாத போதனையாளர் என உளவுப் பிரிவின் பணிப்பாளர் பிரதிி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜெயவர்த்தன 2018.01. 25 ஆம் தேதி கடிதத்தில் ஏற்கனவே குற்ற விசாரணை திணைக்களத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிர்த்தவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதனால் குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பணிப்பாளரின் நிலைப்பாட்டினை ஏற்றுக்கொள்ள முடியாது. சஹ்ரான் வெளிநாட்டு அடிப்படைவாதிகள் உடன் தொடர்புகளில் உள்ளார் என வெளிநாட்டு உளவுப் பிரிவிளரால் அறிவிக்கப்பட்டுள்ளதாக மேலும் அறியக் கிடைத்தது.
மாவனல்லையில் இடம்பெற்ற சம்பவங்களுடன் தொடர்புடைய குழுவினருக்கு சர்வதேச ஒத்துழைப்பு இருக்க முடியும் என குற்ற விசாரணை திணைக்களத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கருதவில்லை என்பது தெரிகிறது.
இந்த விசாரணைகளுக்கு இரகசிய போலிஸ் முக்கியத்துவம் வழங்கி இருக்கவில்லை என்பது சாட்சியங்களில் தெரிய வருகிறது. இந்த கால எல்லைக்குள் தமது பிரிவு சுமார் 400 விசாரணைகளை நடத்தியுள்ளதாக விசாரணை அதிகாரி சாட்சியமளித்துள்ளார்.
இரகசிய பொலிஸ் பிரிவில் மொத்தமாக 700க்கு மேற்பட்ட அதிகாரிகள் சேவையில் இருந்தாலும் இந்த விசாரணைக்கு பிரதான விசாரணையாளர் உட்பட 5 அதிகாரிகளே ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது (தொடரும்)
www.news timetamil.com






No comments