கிண்ணியாவில் கொரோனா தொற்று
"கிண்ணியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியது". டொக்டர் எம்.எச்.எம். றிஸ்வி
(கியாஸ் ஷாபி)
2021 ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி 28 வரையுமான காலப்பகுதிக்குள் கிண்ணியா சுகாதார பிரிவில் 107 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்னார். இதில் 102 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர் என கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இதில் 202l, 02.23 ஆம் ஒருவர் மரணமானார். இவரோடு, முதல் நிலை தொடர்பாளர்களாக இருந்த 5 நபர்கள் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் மாத்திரமே தற்போது, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாண்டு முதலாவது தொற்றாளர் ஜனவரி மாதம் 1 ஆம் திகதி 49 வயதான பெண் ஒருவர் கிண்ணியா அகமட் லேனில் இருந்து அடையாளம் காணப்பட்டார்.
2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரையுமான காலப்பகுதியில் கிண்ணியா சுகாதாரப் பிரிவில் 11 நபர்கள் மாத்திரமே கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்த ஆண்டு கடந்த இரு மாதங்களில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டு, தற்போது தொற்று பரவல் துறைவடைந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது என்றும் தெரிவித்தார்.






No comments