Breaking News

ஆசிரியர் நியமனத்துக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் வெற்றிடமாக காணப்படும் பின்வரும் பாடங்களுக்காக இலங்கை ஆசிரிய சேவையில் 3 ஆம் வகுப்பின் 1(இ) தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்யும் போட்டிப் பரீட்சை-2021 க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பாடங்கள் நாடு முழுவருக்குமான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

ஆங்கிலம் (English)

வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கான விண்ணப்பங்கள் கோரல்

தகவல் தொழில்நுட்பம் (ICT),மனையியல் (Home Economics), சங்கீதம் ( Music) சித்திரம் ( Arts) நடனம் ( Dance)

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

பரீட்சைஆணையாளர் நாயகம், 
பரீட்சை ஒழுங்கமைப்புக் கிளை,
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்,
த.பெ.1503
கொழும்பு

The Commissioner General of Examinations, Organizations and Foreign Examinations Branch, Department of Examinations, Sri Lanka,Post Box 1503, Colombo

கல்வித் தகைமைகள்

01. கல்வி விடயத்திற்கு பொறுப்பான நிரல் அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்படும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப் படுகின்ற இரண்டு வருடங்களுக்கும் குறையாத காலவரம்புடன் கூடிய தேசிய தொழில் திறன் மட்டம் (6) க்கு குறைவில்லா தகுதியினைக் கொண்ட் டிப்ளோமா பாடத்திட்டம் ஒன்றை சிறப்பாக கற்று பூர்த்தி செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.

02. இலங்கை ஆசிரிய சேவை பிரமாணக்குறிப்பின் ஒழுங்குவிதிகளுக்கமைய கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் சிங்கள மொழி அல்லது தமிழ் மொழியை ஒரு பாடமாக சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

03. வயதெல்லை : 18-35

பரீட்சைக் கட்டணம் 600 ரூபாய்கள்

தமிழ் | English

தமிழ் விண்ணப்ப படிவம்






No comments