Breaking News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழு அறிக்கையிலிருந்து:

 

சஹ்ரானின் ஆரம்ப நாட்கள்

தொடர் - 10 

தமிழில் ஏ.ஆர்.ஏ.பரீல்

சஹ்ரான் 1986 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி பிறந்தார். தந்தையின் பெயர் கயாத்து முகமது காசிம். சஹ்ரானின் தாயார் பெயர் அப்துல் காதிர் சித்தி சலீமா. சைனி மற்றும் றிழ்வான் ஆகியோர் சஹ்ரானின் சகோதரர்கள். இவர்கள் சாய்ந்தமருது சம்பவத்தில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி உயிரிழந்தனர். இரண்டு சகோதரிகள். அவர்கள் முகம்மட் காசிம் ஹிதாயா மற்றும் முகம்மட் காசிம் மதனியா ஆகியோராவார்.

முகம்மட் காசிம் ஹிதாயா 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி சாய்ந்தமருது சம்பவத்தில் பலியானார். மற்ற சகோதரி தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சஹ்ரான் பிறந்தபோது காசிம் முகமட் ஜஹ்ரான்  என்றே பெயர் சூட்டப்பட்டது.சஹ்ரானின் 862014685 v எனும் தேசிய அடையாள அட்டையிலும், N 2017422 எனும் இலக்க கடவுச் சீட்டிலும்  இந்தப் பெயரே குறிப்பிடப்பட்டுள்ளது.

மனைவியின் சாட்சியத்தின் படி சஹ்ரான் என்ற பெயரை 2009க்கு பின்பே பயன்படுத்தியுள்ளார்.

சஹ்ரான் தனது இளவயது காலத்தில் எந்தவித தீவிரவாதிகளும் கவரப்படவில்லை. 1990 களில் காத்தான்குடி மத்ரஸாவில்  மாணவராக கல்வி கற்ற காலத்தில் தப்லீக் ஜமாஅத்தின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. காத்தான்குடி பள்ளிவாசல் ஒன்றில் 1998ஆம் ஆண்டு முதல் சுமார் மூன்று வருட காலம் குர்ஆனைக் கற்றார்.

அவர் 2001 இல் காத்தான்குடி ஜாமிய அதுல் பலாஹ்  மதரஸாவில் சேர்ந்து இஸ்ஸாத்தைப் படித்தார். இந்த காலகட்டத்தில் அவர் நெளபர் என்பவருடன் பரிச்சயம் ஆனார். பழகினார்.

நௌபரே சஹ்ரானை வகாபிஸ கொள்கையின்பால் ஈர்த்தார். இந்தக் கொள்கையால் அவர் வசீகரிக்க பட்டதால் அவர் பயின்ற மதரசாவில் விரிவுரையாளர்கள் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

இதன் காரணமாக அவர் 2005 இல் மதுரசாவில் இருந்தும் வெளியேற்றப்பட்டார். கீழ்படியாமை மற்றும் தீவிரவாத கொள்கை உடையவராக இருந்த காரணத்தினாலேயே அவர் வெளியேற்றப்பட்டார்.

2005 / 2006 களில் சஹ்ரான் தாருல் அதர் அத்தஅவிய்யா என்னும் ஒரு அமைப்பினை காத்தான்குடியில் ஆரம்பித்தார். இது வகாபிஸ இயக்கமாகும்.

இந்த காலகட்டத்தில் சஹ்ரான் கிலாபத் பற்றி பேசவில்லை. சஹ்ரான், நெளபர் ஆகியோருடன் நஸ்மல் மெளலவி, அஸ்பர் மெளலவி, றவூப் மற்றும் தெளபீக் ஆகியோர் தாருல் அதர் அமைப்பில் இருந்தனர்.

சஹ்ரான் ஹாதியாவை 2005 ஆம் ஆண்டு நெகுனுகொல்லையில் அரபு பாடசாலை ஒன்றில் சந்தித்தார். நெளபரைச் சந்திக்க சென்றிருந்த போதே காதியாவைக் கண்டுள்ளார்.

நெளபர், காதியாவின்  தாயாரின் சகோதரி ஒருவரையே திருமணம் செய்திருந்தார். இரு குடும்பங்கள் அருகருகே வசித்து வந்தன. சஹ்ரான் காதியாவை 2005 இல் திருமணம் செய்துகொள்வதற்கு விரும்பினார். அப்போது காதியாவுக்கு வயது 10.

காதியாவின் தந்தை தனது மகள் திருமணம் செய்து கொள்வதற்கான வயதை எட்டவில்லை என்றும் மகளின் உயர்தரப் பரீட்சைக்கு பின்பே திருமணம் நடக்கலாம் என்றும் தெரிவித்தார். அதற்கு பின்பு சஹ்ரான் கெகுனுகொல்ல இப்னு மஸ்ஜித் மத்ரஸாவிலும் குருனாகல் அனுக்கன மத்ரஸாவிலும்  சேர்ந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை நௌபர் செய்தார்.

2006 ஆம் ஆண்டளவில் சஹ்ரான் கொந்தனிதொட மஸ்ஜிதுல் பெளஷான் பள்ளிவாசலில் உரை நிகழ்த்தினார். அவர் அங்கு உரை நிகழ்த்துகையில்,  அன்றாட வாழ்க்கை கட்டாயமாக புனித குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் அமையவேண்டும் என தெரிவித்ததுடன் பாரம்பரிய சிந்தனைகளுக்கு எதிராகவும் பேசினார். இந்த காலகட்டத்தில் சஹ்ரான் வகாபிசத்தை தழுவியிருந்தார்.

2007 இறுதி முதல் 2009 வரை சஹரான் இமாம் மஸ்உத் மதரஸாவில் (கொட்டரமுள்ள ஜூம்மா பள்ளிவாயல் ) தனது கல்வியை தொடர்ந்தார். அதன்பின்பு அவர் கண்டிப்பான வகாபிச கொள்கையுடைய இஸ்லாமிய நிலையத்தில் இணைந்துகொண்டார். 2008ஆம் ஆண்டு இறுதியில் அவர் அந்த இஸ்லாமிய நிலையத்தில் இருந்து வெளியேறினார்.

2009ஆம் ஆண்டளவில் தாருல் அதர் நிர்வாகத்துடன் முரண்பாடுகளை அடுத்து, அதிலிருந்து வெளியேறி தவ்பீக் மற்றும் சைனியுடன் சேர்ந்து தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ) அமைப்பை நிறுவினார்.

இந்த அமைப்பு சமூக நல அமைப்பாக 2015.12. 15 ஆம் தேதி காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்டது.

சஹ்ரான் தனது நண்பரான ஹைதர் அலியின் அழைப்பின் பெயரில் 29 ஆம் ஆண்டு ஜனவரியில் ஜப்பானுக்கு பயணமானார். ஜப்பானில் மூன்று மாதங்கள் தங்கி இருந்த 2009 மார்ச்சில் இலங்கை திரும்பினார். 

சஹ்ரானினதும் காதியாவினதும் திருமணம் 2009.10.14 நடைபெற்றது. பின்பு சஹ்ரானும் மனைவியும் சுமார் மூன்று மாதங்கள் சஹ்ரானின் வீட்டில் தங்கியிருந்து பின்பு வாடகை வீட்டுக்கு குடி பெயர்ந்தனர். அதன் பின் அவர்கள் மாறி மாறி சஹ்ரானின் பெற்றோர் வீட்டிலும் கெகுனுகொல்லையிலும் தங்கியிருந்தனர்.

பின்பு மாவனல்ல கனேதென்னக்கு இடம்பெயர்ந்து அங்கு 7 மாதங்கள் வாழ்ந்தனர்.  இத்தாலத்தில் சஹ்ரான் மத போதனைகளுக்காக அக்குரணைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

சஹ்ரான் தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள். முதலாவது ஆண் பிள்ளை. முகமட் சஹ்ரான் மாசிம். இரண்டாவது பெண் பிள்ளை. ஆண் குழந்தை 2011.10.30 தேதியும் பெண் குழந்தை 2015-06.07 தேதியும் பிறந்தனர்.

ஆண் பிள்ளை 2019. 4. 26 தேதி சாய்ந்தமருது இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் தனது 8வது வயதில்  உயிரிழந்தார்.

சஹ்ரான் இரண்டாவது பிள்ளையான றுதானிய சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில்  உயிர்பிழைத்ததையடுத்து, பாத்திமா காதிியாவின்  பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

2009இல் சஹ்ரான் தௌஹீத் ஆதரவாளர் என வெளிப்படையாக இனங்காணப்பட்டார். இக்காலகட்டத்தில் சஹ்ரானும் நெளபரும் ஒன்றாக தோன்றுவதில் தடங்கல் ஏற்பட்டது.

நௌபர் தொழில் வாய்ப்பு பெற்று கட்டாருக்குச் சென்றார். காத்தான்குடியில் இயங்கி வந்த தெளஹீத் குழவுன் பிரச்சார  செயலாளராக சஹ்ரான் செயற்பட்டதாக  16.09.2009 இல் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கால காலத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கும் தமது அமைப்பினர் பொறுப்பாளர்கள் அல்ல என அதில் குறிப்பிட்டுள்ளார்.

தமது இரண்டாயிரம் உறுப்பினர்கள் உண்மையான இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் அறிவித்துள்ளார். அவர் சூபி முஸ்லிம்களின் செயற்பாடுகளை விமர்சித்துள்ளார். அவர்கள் தவறான பாதை பின்பற்றுவதாக அதில் தெரிவித்துள்ளார்.

தமக்கு மேற்காசிய நாடுகளில் இருந்து நிதி உதவி கிடைக்கவில்லை எனவும் தம்மிடம் ஆயுதங்கள் இல்லை என்றும் மறுத்துள்ளார். 

சஹ்ரானை அவரது காரியாலயத்தில் நேர்காணல் மேற்கொண்டபோது ரீ 56 ரக ஆயுதங்கள் அவரது காரியாலய வளாகத்தில் இருந்ததாக குறித்த கட்டுரையாசிரியர் சாட்சியமளித்துள்ளார்.

(தொடரும்)

www.newstimetamil.com




No comments