Breaking News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழு அறிக்கையிலிருந்து...

 

சஹ்ரானின் ஆரம்ப நாட்கள்

தொடர் - 11 

தமிழில் ஏ.ஆர்.ஏ.பரீல்

சஹ்ரானும் அவரது குழுவினரும் 2009 விடுதலைப் புலிகள் காலத்தில் சில ரீ56 ஆயுதங்களை தம்வசம் வைத்திருந்ததாக அறியப்பட்டுள்ளது. ஆனால் அவற்றைப் பெற்றுக் கொண்ட விதம் குறித்தோ அவற்றின் எண்ணிக்கை பற்றிய சரியான கூறமுடியாதுள்ளது.

பாதுகாப்பு படையினர் சட்டவிரோத ஆயுதங்களை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். 2009இல் ஆயுதங்களை பாதுகாப்பு பிரிவினரும் ஒப்படைக்குமாறு மன்னிப்புக் கால எல்லை வழங்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு படையினர் ஆயுதங்களை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, ரில்வான் ஆயுதங்கள் சிலவற்றை புதைத்து வைத்ததாக சாட்சியங்கள் உள்ளன.

பின்பு பிர்தௌஸின் தலையீட்டை அடுத்து அவை விற்பனை செய்யப்பட்டன. அந்த சந்தர்ப்பத்தில் அவ் ஆயுதங்கள் உபயோகப்படுத்தும் தரத்தில் இருக்கவில்லை.

விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான சாட்சியங்களின் அடிப்படையில் சஹ்ரான் தெளஹீத் ஆதரவாளராக பிரதான ஊடகங்களில் அடையாளப்படுத்தப் பட்டுள்ளார். 2009 களில் தீவிரவாதியாக இருந்துள்ளார் என்பதை ஆணைக்குழு இனங்கண்டு உள்ளது.

26 பெப்ரவரி 2013 க்கும் 22 அக்டோபர் 2014 மிடையில் சூபி குழுவான அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கை நிதியம் சஹ்ரானுக்கும் அவரது குழுவான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு எதிராக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் 11 முறைப்பாடுகளை செய்துள்ளது.

அப்துல் ஜவாத் ஆலிம் நம்பிக்கை நிதியத்தின் ஆன்மீகத் தலைவர் மௌலவி ஏ அப்துர் ரவூப் மிஸ்பாஹி பஹ்ஜிக்கும் எதிராக தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தெரிவித்திருந்த கருத்துக்களுக்காகவே காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

2014 இல் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டைகளுக்கு அமைவாக மட்டக்களப்பு மகிஸ்றட் நீதிமன்றில் வழக்கு விசாரணை இடம்பெற்றது.

பி 897 - 2014 ஆம் இலக்க வழக்கு விசாரணைகளுக்கு சஹ்ரான் நீதிமன்றில் ஆஜர் ஆனார். இந்த வழக்கு விசாரணை 2017 டிசம்பரில் இடைநிறுத்தப்பட்டது.

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் 2013. 3.2 ஆம் திகதி தவ்ஹீத் எனும் பெயரில் சஞ்சிகை ஒன்றினை வெளியிட்டது. அதில் அப்போதைய மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவை சஹ்ரான் விமர்சித்து இருந்தார்.

அலவி மௌலானா 2013. 2. 26ஆம் தேதி விழா ஒன்றில் கலந்து கொண்டு தனது நெற்றியில் பொட்டு வைத்து இருந்த புகைப்படம் ஒன்று தொடர்பில் சஹ்ரான் எதிர்ப்பு வெளியிட்டு இருந்தார்.

அத்தோடு இலங்கையில் ஒன்றை உருவாக்குவதற்காக பொதுபலசேனா ஜாதிகஹெல உருமய சிங்கள ராவய என்பவற்றுக்கு அவர்களது இஷ்டப்படி செயல்பட இடம் அளிக்கப்படுகின்றமைக்கு  எதிராக குரல் கொடுக்காமல் தொடர்பில் சஹ்ரான் அலவியை விமர்சித்திருந்தார்.

சஹ்ரான் வெளியிட்ட கருத்தினை அலவி ஒரு அறிக்கை மூலம் வன்மையாக கண்டித்து இருந்தார். வஹாபிகளின் அமைப்பு எனும் பெயரில் ஆயுதமேந்திய குழுவினர் கிழக்கு மாகாணத்தில் செயல்பட்டு வருவதாக அவர் அதில் குறிப்பிட்டு இருந்தார். எனினும் இலங்கையிலோ அல்லது முழு உலகிலுமோ வஹாபிகள் என்று அமைப்புகள் இல்லை என்று சாஹ்ரான் மறுத்திருந்தார்

சர்வதேச கற்கை நெறிகளுக்கான பண்டாரநாயக்கா நிலையத்தில் கற்கும் ஒருவர் முஸ்லிம் ஆயுததாரிகள் தொடர்பான தனது ஆய்வுக்காக சஷ்ரானை நேர்காணல் செய்துள்ளமையை ஆணைக்குழு கண்டறிந்துள்ளது.

அந்த நேர்காணல் 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேர்காணலின் போது பின்வரும் முக்கிய விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் முஸ்லிம்கள் தொடர்ந்து தொந்தரவுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். ஆனால் அதிகாரிகள் இதனை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை. அத்தோடு மியன்மார் முஸ்லிம்களின் அவல நிலை பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இலங்கை முஸ்லிம்களுக்கு தமது மனக்குறைகளை எடுத்துக் கூறுவதற்கு சுதந்திரம் இல்லை. இலங்கை அரசாங்கம் சிங்கள தீவிரவாத அமைப்பான பொதுபல சேனா மற்றும் ராவண பலய என்பவற்றின் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இலங்கை முஸ்லிம்கள் பற்றி அமைச்சர் சம்பிக்க ரணவக்க வெளியிட்டுள்ள புத்தகம் கட்டாயமாக தடை செய்யப்பட வேண்டும். இந்த புத்தகத்தில் முஸ்லிம் அடிப்படைவாத குழுக்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை ஆகும்.

இலங்கையில் முஸ்லிம்கள் கலாச்சார ரீதியில் ஒன்றிப்போகும் தேவை இல்லை. அவ்வாறு ஒன்றிப் போனால் முஸ்லிம் கலாச்சாரம் பாதிக்கப்படும்.

முஸ்லிம்கள் கட்டாயமாகக் குர்ஆனின் போதனைகளை கடைப்பிடிக்க வேண்டும். அத்தோடு ஷரிஆ சட்டம் அனைத்து முஸ்லிம்களுக்கும் கட்டாயமானதாகும். பொதுபலசேனா மற்றும் சாவனா பலய என்பன அண்மையில் தோன்றினவே. சில வருடங்களுக்கு முன்பு இவை இருக்கவில்லை. அந்த அமைப்புகள் ஏன் உருவாகின்றன என்ற கேள்விக்கு சஹ்ரான் சரியான பதில் வழங்கவில்லை.

2014 மே 1ஆம் தேதி அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கை நிதியம் கிழக்கு மாகாண பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேராாவிடம் முறைப்பாடு ஒன்றைச் செய்தது. சில முஸ்லிம் குழுக்களினால் தாம் அச்சுறுத்தபடுவதாகவும் அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாத குழுக்கள் என இனங்காணப்பட்டுள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுக்களில் சஹ்ரானின்  பெயரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பெயரும் உள்ளடங்கி இருந்தன.

மேஜர் ஜெனரல் லால் பெரேரா சஹ்ரானை அழைத்து வன்முறை நடவடிக்கைகளில் இருந்து  தவிர்க்குமாறு எச்சரித்தார். என்றாலும் சஹ்ரான் எச்சரிக்கைகளை கவனத்தில் கொள்ளவில்லை. சூபி குழுக்களுக்கு எதிரான தாக்குதல்களை தொடர்ந்தும் மேற்கொண்டார்.

2014 /2015 காலப்பகுதியில் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பள்ளிவாயல் ஒன்றினை நிர்மாணிப்பதற்கு உதவிகள் தேவைப்படுகிறதா என்று சஹ்ரானிடம் வினவினார். இக் கோரிக்கையை சஹ்ரான் நிராகரித்தார். எனினும் கூட்டங்களை நடத்துவதற்கும் ஒலிபெருக்கி உபயோகிப்பதற்குமான அனுமதியை போலீசாரிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கும் சஹ்ரான் சிப்லி பாரூக்கின்  உதவியைப் பெற்றுக் கொண்டார்.

இதே காலகட்டத்தில் ஹிஸ்புல்லா மற்றும் சிப்லி பாரூக்கின் வேண்டுதலின் படி, அவர்கள் இருவருக்கும் இடையிலான முரண்பாடுகளை தீர்ப்பதற்கும் சஹ்ரான் தலையிட்டார். இந்த கூட்டம் காத்தான்குடியில் தேசிய தவ்ஹீத் ஜமாத் பள்ளிவாசலில் இடம்பெற்றது. இரண்டு தரப்பிலிருந்தும் ஐவர் வீதம் இதில் கலந்து கொண்டனர்.

2015 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது சஹ்ராம் அவரது குழுவினரும் மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவாக மும்முரமாக பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். (தொடரும்)

www.newstimetamil.com




No comments