கிண்ணியா அக்செரியன் சுப்பர் லீக்கின் அரையிறுதி ஆட்டங்கள்.
கிண்ணியா அக்செரியன் சுப்பர் லீக் உதைப்பந்தாட்ட சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் மோதுவதற்கு சுப்பர் கிங் மற்றும் ரேஸின் ஸ்டார் ஆகிய இரு அணிகளும் தகுதியைப் பெற்றுக் கொண்டன.
எட்டு அணிகள் பங்கு கொண்ட இந்த தொடர் கடந்த நான்கு தினங்களாக கிண்ணியா எழிலரங்கு மைதானத்தில் நடைபெற்றது.
UNV நிறுவனம் இதற்கு பிரதான அனுசரணை வழங்கியது. இணை அனுசரணையாளர்களாக இப்ராஹிம் சதாத், ஐரோப்பியன் கெம்பஸ் ஆகியோர் வழங்கினர். விளம்பர அனுசரணையை மைலோ கம்பனி வழங்கியது.
இத் தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று (14) பார்வையாளர்களின் இரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்றது.
இன்றைய முதல் அரையிறுதி ஆட்டத்தில் சுப்பர் கிங் மற்றும் ஜுபிடர் ஆகிய அணிகள் ஆடு களத்தில் குதித்தன.
இதில் ஆட்டம் ஆரம்பித்து 20 நிடத்தில் சுப்பர் கிங் அணி கோல் ஒன்றைப் போட்டி தனது நிலையை ஸ்தீரப்படுத்திக் கொண்டது. இதனைத் தொடர்ந்து அடுத்து இரண்டு நிமிடத்தில் மற்றுமொரு கோலைப் போட்டு, இறுதிப் போட்டியில் நுழைவதற்கான தகுதியை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டது.
தொடர்ந்து உற்சாகத்தோடு விளையாடிய சுப்பர் கிங் அணி இரண்டாவது கோலைப் போட்டு அடுத்து ஐந்து நிமிட இடைவெளியில் 3வது கோலைப் போட்டு எதிரணியின் இறுதிப் போட்டிக்கான கனவை முறியடித்தது. ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் பலத்த போராட்டத்துக்கு மத்தியில் ஒரு கோலைப் போட்டு ஆறுதல் அடைந்தது ஜூபிடர் அணி.
இதன் மூலம் ஆட்டத்தின் இடைவேளைக்கு முன்னரே, 3 கோல்களைப் போட்டு, 3:1 என்ற கோல் அடிப்படையில் ஜுபிடர் அணியை வெற்றி பெற்று, தனது இறுதிப்போட்டிக்கான கனவை நனவாக்கியது சுப்பர் கிங் அணி.
இந்த தொடரில் சுப்பர் கிங் அணி மூன்று போட்டிகளைச் சந்தித்து மொத்தமாக 4 கோல்களைப் போட்டு 9 புள்ளிகளைப் பெற்று 2வது இடத்துக்கு வந்தது.
ஆனால் ஜுபிடர் அணி 3 போட்டிகளைச் சந்தித்து மொத்தமாக 5 கோல்களை போட்டு 12 புள்ளிகளைப் பெற்று 1வது இடத்துக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதில் சிறந்த நாயகனாக சுப்பர் கிங் அணியைச் சேர்ந்த முகம்மது ரொஹான் தெரிவு செய்யப்பட்டார்.
பலத்த எதிர்பார்புக்கு மத்தியில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் சுப்பர் பைட்டர் மற்றும் ரேஸின் ஸ்டார் ஆகிய இரு அணிகளும் மோதின.
இறுதி வரை மிகவும் விறுவிறுப்பாகச் பலத்த போட்டியாகவும் சென்ற இந்த ஆட்டம் ஆரம்பித்து 35 ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் போட்டு தனது நிலையை ஸ்தீரப்படுத்திக் கொண்டது சுப்பர் பைட்டர் அணி.
இதனை எதிர்த்தாடிய ரேஸின் ஸ்டார் அணி இறுதிவரை போராடிய கடைசி நேரத்தில் கோல் ஒன்றைப் போட்டு, ஆட்டத்தை சமப்படுத்திக் கொண்டது.
இந்த நிலையில், ஆட்டம் 1:1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. இதனல் வெற்றி தோல்வி பெனால்டி உதை மூலம் நிர்ணயிக்கப்பட்டது.
இதனடிப்படையில் ரேஸின் ஸ்டார் அணி 6 : 5 என்ற கோல் அடிப்படையில் பெனால்டி உதை மூலம் போட்டியை வென்று இறுதியாட்டத்துக்கான தகுதியை தனதாக்கிக் கொண்டது.
இந்த ஆட்டத்தின் நாயகனாக ரேஸின் ஸ்டார் அணியைச் சேர்ந்த கோல் காப்பாளர் முகம்மது முப்லி தெரிவு செய்யப்பட்டார்.
ரேஸின் ஸ்டார் (Racing Stars) அணி இந்த தொடரில் 3 போட்டிகளில் விளையாடி மொத்தம் 3 கோல்களைப் பெற்று, 7 புள்ளிகளுடன் முதல் பிரிவில் 2 ஆம் இடத்தைப் பெற்றிருந்தது.
சுப்பர் பைடர் (Super Fighter) அணி இந்த தொடரில் 3 போட்டிகளில் விளையாடி, 5 கோல்களைப் பெற்று, 9 புள்ளிகளுடன் முதல் பிரிவில் 1 ஆம் இடத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.












No comments