ஒரு வித்தியாசமான உளவியல் தந்திரம்!
நீங்கள் ஒரு அழகான ஆண்மகன். என்று வைத்துக்கொள்வோம்! உங்களுக்கு திருமணம் ஆகவில்லை என்றும் வைத்துக்கொள்வோம்!
நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் ஒரு அழகான பெண்மீது உங்களுக்கு காதல் ஏற்பட்டுவிட்டது, என்று வைத்துக்கொள்வோம்!
ஆனால் உங்களுக்குச் காதலை சொல்ல தைரியம் இல்லை! இப்படி இருக்கும்போது, ஒரு நாள் அவள் உங்களிடம் வருகிறார்!
வந்து தனது அழகான விழிகளால் உங்களை பார்த்து, உங்களிடம் தயக்கமாக " சார்! நீங்கள் எனக்கு ஒரு சின்ன உதவி செய்ய வேண்டும்!!" என்று கேட்கிறார்.
நீங்களும் குதித்து கொண்டு, "என்ன உதவி நான் செய்யவேண்டும்?" என்று ஆவலுடன் கேட்கிறீர்கள்!
அவளும் உதவி கேட்கிறாள். அவள் கேட்ட உதவி உங்களுக்கு சாதாரணமான ஒன்று!ஆனால், அவளுக்கு " அது மிக முக்கியமான விஷயம் " என்று வைத்துக்கள்வோம்!
இப்போது நீங்கள் தயங்காமல் மயங்காமல் அவளுக்கு அந்த உதவியை செய்து கொடுக்க வேண்டும்.
செய்து கொடுத்ததும் காதலை சொல்ல வேண்டும்! அப்படித்தானே? என்று கேட்கிறீர்களா, அதுதான் இல்லை!
இங்கு தான், நீங்கள் உளவியல் தந்திரம் ஒன்றை பயன்படுத்த வேண்டும்!அதைத்தான் நான் கற்றுக் கொடுக்க போகிறேன்.
அதாவது நீங்கள் உதவி செய்து முடித்தவுடன், அவள் உங்களுக்கு நன்றி கூறுவாள். மிக்க நன்றி!! என்று சொல்லுவாள்!
நீங்கள் எனக்கு நீங்கள் ஒன்றும் நன்றியெல்லாம் சொல்ல வேண்டாம்! இதில் என்ன இருக்கிறது எல்லோரும் செய்வதை தான் நான் செய்தேன்! நன்றி எதற்கு? என்றெல்லாம் சொல்ல கூடாது!
நீங்கள் "எனக்கு நன்றி வேண்டாம், நான் உங்களுக்கு சரியான நேரத்தில் உதவி செய்தேன்! நீங்கள் நாளை எனக்கு ஏதாவது தேவை என்றால் உதவி செய்யாமலா இருபபீர்கள்? என்று சொல்லி வையுங்கள்.
கொஞ்ச நாள் கழித்து, அவளிடம் " எனக்கு வீட்டில் பெண் பார்க்கிறார்கள்! ஆனால் எனக்கு யாருமே பெண் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்" என்று சொல்லி வருத்தப்படுங்கள்!
இதைக் கேட்டதும் அவள் மனதில் உங்கள் மீது ஒரு காதல் தோன்றும்! நீங்கள் ஏன் என்னை திருமணம் செய்து கொள்ளக்கூடாது? என்று அந்த பெண்ணை உங்களிடம் கேட்பார்!!
உங்களுக்கு, பழம் நழுவி பாலில் விழுந்தது போல இருக்கும்! நினைத்தபடி அவளை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழலாம்! சுபம்!!
இங்கே எங்கே உளவியல் தந்திரம் ஒளிந்து இருக்கிறது? என்று கேட்கிறீர்களா!
நீங்கள் அவளுக்கு உதவி செய்தவுடன் நன்றி அல்லது பணம் வாங்கிவிட்டால் அது அந்த காலத்துடன் முடிந்து போயிருக்கும்!
ஆனால் நீங்கள் பெருந்தன்மையாக நன்றி வாங்காமல் ஒரு கடன் செய்து உள்ளீர்கள். அப்படியே விட்டால் அவள் மனதில் உங்களுக்கு ஏதாவது திரும்ப செய்ய வேண்டும் என்று அவள் மனம் உறுத்திக்கொண்டே இருக்கும்.
இதற்குப் பெயர் Reciprocity Effect! பதிலுக்கு பதில் திருப்பி தரும் ரெசிபிராசிட்டி எபெக்ட் என்று சொல்வார்கள் சைக்காலஜி யில்!
நமக்கு யாராவது உதவி செய்து விட்டால் நாம் அவர்களுக்கு ஏதாவது திரும்ப செய்ய வேண்டுமெனறு நம் மனம் சொல்லிக் கொண்டே இருக்கும். இதை பயன்படுத்தி நீங்கள் அவள் தானாக வந்து உங்களை காதலிக்க வைத்து விட்டீர்கள்!!எப்படி? வாழ்த்துக்கள்!!!





No comments