கிண்ணியா வைத்தியசாலைக்கு 10 கட்டில்கள்
(கியாஸ் ஷாபி)
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் அறிமுகப்படுத்தப்பட்ட கருத்திட்டத்திற்கு அமைவாக,
கொரோனா நோயாளர்களுக்கான 10 நாட்களில் 10000 கட்டில்கள் தயாரித்தல் செயல் திட்டத்தின் கீழ், கிண்ணியா வைத்தியசாலைக்கு 10 கட்டில்கள் வழங்கி வைப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று இளைஞர் பாராளமன்ற உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஒவ்வொரு இளம் பாராளுமன்ற உறுப்பினர்களின் நேரடி கண்காணிப்பின் ஊடாக கிண்ணியா பிரதேச சம்மேளனம் சார்பான கொரோனா நோயாளர்களுக்கான கட்டில்கள் அமைக்கும் திட்டத்தின் செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு இரவு,பகலாக வேலைத்திட்டம் இடம்பெற்று முடிவடையும் நிலையில் உள்ளதாக. இளைஞர் பாராளுமன்ற அமைச்சர் ற.முகம்மது சபான் தெரிவித்தார்.
இச் செயல் திட்டத்திற்கு நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்கும் ரூபா 50, 000 நிதி வழங்கி 10 கட்டில்கள் வீதம் அமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 10 கட்டில்களுக்கான சுமார் 50, 000/= ரூபாவானது போதுமானதாக இருக்கவில்லை, கட்டில் அமைக்கும் செயட்பாட்டின் போது ஒரு கட்டிலுக்காக ரூபாய் 7000 வீதம் மொத்தமாக 10 கட்டிலுக்கு 70, 000/= செலவு ஏற்பட்டிருந்தது.
இதற்கு மேலதிகமாக ஒவ்வொரு கட்டில்களுக்கும் தேவைப்பட்ட மேலதிக செலவான 20, 000 ரூபாவை கிண்ணியா பிரதேச செயளாலர் மற்றும் கிண்ணியா பிரதேச இளைஞர்கழக சம்மேளனத்தின் பங்களிப்புடன் ஈடு செய்யப்பட்டது என்றும் இளைஞர் பாராளுமன்ற அமைச்சர் ற.முகம்மது சபான் தெரிவித்தார்.









No comments