Breaking News

கிண்ணியா பொலிஸ் நிலையத்துக்கு புதிய பொறுப்பதிகாரி நியமனம் .

 

"இன, மத பேதங்களுக்கு அப்பால் எனது சேவை தொடரும்." கிண்ணியா பொலிஸ் பொறுப்பதிகாரி. 

(கியாஸ் ஷாபி)

கிண்ணி 1யா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக W.H.C.K  சமிந்த பெர்ணான்டோ நேற்று (15) முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த இவர், 25 வருடங்களாக பொலிஸ் சேவையில் மையாற்றி வருகிறார். 

தன்கொட்டுவ, கிரிபத்கொட ஆகிய பிரதேசங்களில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகவும் வெண்ணப்புவ தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றியவராவார்.

இறுதியாக மன்னாரில் பொலிஸ் தலைமையதிகாரியாக அதிகாரியாக கடமையாற்றிய இவர், கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நேற்று (16) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர்,  இன்று (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,

சட்ட விரோத மண் அகழ்வு தொடர்ச்சியாக நடைபெறுகின்ற பல இடங்கள் இங்கு இருப்பதாக அறிந்து கொண்டேன். அதே போன்று கசிப்பு உற்பத்திக்கான இடங்களும் இங்கு இருக்கின்றன. 

இந்த நிலையில், குற்றச் செயல்கள் எந்த வடிவத்தில் நிகழ்ந்தாலும்  அதனைத் தடுப்பதற்கு, நூறு வீதம் நாட்டின் சட்டத்தை பயன்படுத்துவேன். 

இன, மத பேதங்களுக்கு அப்பால், இந்த பிரதேசத்தில் எனது சேவை இருக்கும் என்றும், இதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பை அவசியம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

கிண்ணியா பிரதேச செயலகப் பிரிபில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து, இங்கு 52 மரணங்கள் நிகழ்ந்திருப்பதையிட்டு, தான் கவலையடைந்திருப்பதாகவும், தெரிவித்த அவர்,

கொரோனாவின் சவாலை வெற்றி கொள்வதற்கு, இப்பிரதேச மக்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டுவதோடு, பயணத் தடை, தனிமைப்படுத்தல் சட்டங்களை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார். 

கடந்த மூன்று வருடங்களாக கிண்ணியா பொலிஸ் நிலை பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில கால்லகே பண்டாரவளை பிரதேசத்திற்கு இடமாற்றம் பெற்று சென்றதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு இவர் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  


No comments