கிண்ணியாவில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி
(கியாஸ் ஷாபி)
கிண்ணியா சுகாதார பிரிவில் 30 வயதிற்கு மேற்பட்டோருக்கும், ஆசிரியர்களுக்கும் முதலாவது கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (28) ஆரம்பிக்கப்பட்டது.
இந்த தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு இடம்பெறவுள்ளதாகவும் கிண்ணியா சுகாதார பிரிவில் 30 வயதுக்கு மேற்பட்ட சுமார் 18000 பேருக்கு இதனை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம். எச். எம்.ரிஸ்வி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர், மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்தப் பிரதேசத்தில் உள்ள 820 ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பிரத்தியேகமாக கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எகுத்தார் வித்தியாலயம், அல் அக்ஸா கல்லூரி, ரி .பி ஜாயா மகாவித்தியாலயம், அல் அதான் மகா வித்தியாலயம், அல் இர்பான் மகாவித்தியாலயம், ஆலங்கேணி கிராம வைத்தியசாலை மற்றும் கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகிய 8 இடங்களில் இந்த தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எனவே 30 வயதிற்கு மேற்பட்டவர்களும் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் தவறாது உரிய இடத்திற்குச் சென்று தங்களுக்குரிய ஊசியைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றும் தெரிவித்தார்








No comments