Breaking News

மூதூர் பிரதேசபையின் உப அலுவலகங்கள் முறையாக இயங்க வேண்டும்₹

 



மூதூர் பிரதேசபையின் கீழ் உள்ள பிரதேச சபையின் உப அலுவலகங்கள் முறையாக இயங்க வேண்டும். அதனை உரிய ஆளணியுடன் இயங்க வைக்க வேண்டும் என உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலக சிரேஷ்ட ஆய்வு அதிகாரி ச. சர்வேஸ்வரன் தெரிவித்தார்.     

இன்று மூதூர் பிரதேச சபை யின் மல்லிகைத்தீவு உப அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற ச்சட்டங்களும் சபையின் பணிகளும் தொடர்பான செயலமர்வில் அவர் இதனை தெரிவித்தார். 

ஆசிய பவுண்டேசன் அமைப்பின் அனுசரணையுடன் பிரதேச சபையும் இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் அவர் மேற்படி கோரிக்கையை விடுத்தார்.  

இந்நிழ்வு பிரதேச சபை செயலாளர் வி. சத்தியஜோதி தலமையில் நடைபெற்றது. அகத்தின் இணைப்பாளர் பொ. சற்சிவானந்தம், பிரதேச சபை உறுப்பினர் வே. வேல்மாறன், உறுப்பினர் ஜெ சீலா உள்ளிட்ட கிராமிய தலைவர் கள் பலரும் கலந்து கொண்டனர். இங்கு மேலும் கருத்து தெரிவித்த உள்ளுராட்சி த்திணைக்கள ஆய்வு உத்தியோகத்தர் குறிப்பிடுகையில், மூதூர் பிரதேச சபையின் கீழ் பிரதேச சபையின் 6 உப அலுவலகங்கள் உள்ளன. அவை உரிய முறையில் இயங்க வேண்டும். தற்காலத்தில் இவை சாதாரண நூலகங்களாகவே செயற்படுகின்றன. அவை குறிப்பிடத்தக்க பணிகளை செய்ய வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை சபையின் கீழ்வரும் மக்களும், சபையின் முகாமைத்துவமும் செய்ய வேண்டும். அதன்கான அதிகாரிகள் நியமிக்கப்படவேண்டும். மக்கள் இதுதொடர்பாக விளங்கி கொள்ள வேண்டும். உள்ளூராட்சி சட்டங்களை அறிந்து வைத்திருக்க வேண்டும். 

அதன்மூலம் பிரதேச சபையின் நோக்கங்களை நாம் நிறைவேற்றவேண்டும். மக்கள் விழிப்புடன் பங்களிக்க வேண்டும் எனவும் அதிகாரி சர்வேஸ்வரன் சுட்டிக்காட்டி னார். 


No comments