Breaking News

கிண்ணியா தள வைத்தியசாலைக்கு சக்கர நாற்காலிகள்



(கியாஸ் 
ஷாபி)

கொரோனா அவசரகால சூழ்நிலையை கருத்தில் கொண்டு கிண்ணியா தள வைத்தியசாலைக்கு
கிண்ணியா லயன்ஸ் கிளப்பினால் 
5 சக்கர நாற்காலிகள் நேற்று(8) அன்பளிப்பு செய்யப்பட்டன.

இதனை லயன்ஸ் கிளப்பின்  தலைவர் டாக்டர் ஏ. ஏச். ஏம். சமீம்  கிண்ணியா தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ. எம்.ஜிப்பிரியிடம் கையளித்தார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,  கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி  பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும்  வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். 


 

No comments