Breaking News

சிவநேசதுரை சந்திரகாந்தன் திருகோணமலைக்கு விஜயம்


(கியாஸ் ஷாபி)

திருகோணமலை மாவட்டத்தின் கோமரங்கடவெல அடம்பனை கிராமத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற கிராமத்துடனான கலந்துரையாடல் கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வை மேற்பார்வை செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கிராமத்துடனான கலந்துரையாடல் கிராமிய அபிவிருத்தி திட்ட ஜனாதிபதி செயலணியின் உறுப்பினருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று(14) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவை மாவட்ட செயலகத்தில் சந்தித்தார்.

இதன்போது குறித்த வேலைத்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பில் அரசாங்க அதிபரால் பாராளுமன்ற உறுப்பினரிற்கு எடுத்துரைக்கப்பட்டது.

No comments