Breaking News

பெண்கள் சிறுமியர் துஸ்பிரயோகத்திற்கெதிரான விழிப்புணர்வு போராட்டம்!

 


கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய பகுதிகளில் பெண்கள் சிறுமியர் துஸ்பிரயோகத்திற்கெதிரான விழிப்புணர்வு போராட்டம் இன்று (13) முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பினால் மட்டக்களப்பு செங்கலடி பிரதான வீதி சந்தியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் இது இடம்பெற்றது.
பெண்பிள்ளைகளை விற்பனை பண்டமாக்காதே, பெண் பிள்ளைகளை மதி அது உன் தாய்மை, சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யாதே, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க உதவுங்கள், போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு இந்த கவணயீர்ப்பை முன்னெடுத்தனர்.
கொரோனா சூழ்நிலையிலும் பாலியல் ரீதியாக துண்புறுத்தப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கான தீர்வு கிடைக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தே இவ் கவணயீர்ப்பு விழிப்புணர்வு நடவடிக்கை இடம்பெற்றது.
இந்த கவணயீர்ப்பினைத்தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு சென்று அரசாங்க அதிபரிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரையும் கையளித்தனர்.

No comments