Breaking News

300 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் வசதிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

திருகோணமலை மாவட்டத்தில் மூவினத்தைச் சேர்ந்த வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற 300 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் வசதிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ராஸிக் றியாஸ்தீனால் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதற்கான செலவு தொகையான  4930881 ரூபா காசோலை  அமைப்பாளரினால் திருகோணமலை தேசிய நீர் வழங்கல்  காரியாலயத்தில் இன்று கையளிக்கப்பட்டது.

பயனாளிகளுக்கு இணைப்பு வழங்கும் வேலைத்திட்டம் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






No comments