ஊரடங்குச் சட்டத்தை மீறிய 6 பேர் கைது!
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு நேரத்தில் கடைகளில் வியாபாரம் மேற்கொண்ட ஆறு பேர் கைது.
(முஹம்மது யூசுப்)
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு நேரத்தில் கடைகளில் வியாபாரம் மேற்கொண்ட ஆறு பேர் இன்று(21) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்தளாய், பேராறு,வட்டுக்கச்சி மற்றும் அக்போபுர போன்ற பகுதிகளில் கடைகளை திறந்து வியாபாரம் மேற்கொண்டு வந்த குற்றச்சாட்டின் பேரிலே இந்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலசரக்குக் கடை, பேக்கரி, கோழி இறைச்சி ஆகிய கடைகளில் வியாபாரம் செய்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்களை கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .





No comments