துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயம்.
மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முந்தன்குமாரவெளி பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆற்றுப்பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டிந்தவர்களை நோக்கி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .
சம்பவத்தில் 26 வயதுடைய ஒருவர் காயமடைந்த நிலையில், அவர் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





No comments