Breaking News

சிறுபான்மையினரின் உரிமைக்கான குரல் ஓய்ந்துவிட்டது!

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களின் மறைவை மக்கள் ஒரு இழப்பாக கருதுகின்றார்கள் என கிண்ணியா மஜ்லிஸ் சூரா விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

மக்களின்  இரங்கல் வார்த்தைகளில் சம்பிரதாயபூர்வமான இரங்கல் வார்த்தைகளாக அல்லாது உள்ளத்தின் ஆழத்திலிருந்து புறப்படுகின்ற வார்த்தைகளாக தென்படுகின்றது.

1994ஆம் ஆண்டு துவக்கம் மங்கள சமரவீர என்னும் பாத்திரம் இலங்கையின் முக்கிய ஒரு அரசியல் பாத்திரமாக மாத்திரமல்லாது இனவாதத்துக்கு எதிரான சிறுபான்மையினரின் உரிமையை மதிக்கின்ற ஜனநாயகத்தின் உரிமையை மதிக்கின்ற ஒரு குரலாக இலங்கை அரசியலில் ஒலித்தது.

அரசியல் வெற்றி தோல்வி களுக்காக தமது கொள்கைகளை விட்டுக்கொடுத்து வெற்றிக்காக இனவாத த்தினை கையில் எடுக்கின்ற காலகட்டத்தில் எப்போதும் சிறுபான்மையினரின் உரிமைக்காக குரல் கொடுத்தவர் மங்கள சமரவீர ...

முஸ்லிம்கள் இனரீதியாக பாதிப்புக்குள்ளான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நியாயத்திற்காக அவரின் குரல் ஒலித்தது. என்பது எமது சமூகம் சார்பில் நன்றி செலுத்தக்கூடிய விடயமாகும்.

அன்னாரின் இறப்பில் ஏற்பட்ட துயரில் நாமும் பங்கேற்கிறோம்.



No comments