Breaking News

சரிப் சேரின் மறைவு கிண்ணியாவுக்கு பேரிழப்பு!


கிண்ணியா பிரதேசம் சகல வழிகளிலும் மறுமலர்ச்சி பெற வேண்டும் என்ற கற்பனையோடு வாழ்ந்து, அவற்றை தனது செயலிலும் காட்டிய ஒரு உத்தமர்தான் சரீப் சேர் என கிழக்கு மாகாண முன்னாள் தவிசாளர் எச். எம். எம். பாயிஸ் தெரிவித்துள்ளார்.

நேற்றைய (3) தினம் இறைவனடி சேர்ந்த கிண்ணியா மத்திய கல்லூரி முன்னாள் அதிபரும் கிண்ணியா சுமையா அரபுக்கல்லூரி பணிப்பாளரும் பிரபல சமூக சேவையாளருமான எஸ்.எச்.எம். சரிப் அவர்களின் மரணம் குறித்து, அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளார்.

அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,  

மர்ஹும் முன்னால் அதிபரும் சமூகசேவையாளருமான சரீப்சே ர் அவர்களுடைய மறைவு எங்களதுசமூகத்திற்கு குறிப்பாக கிண்ணியா பிரதேசத்திற்கு ஓர் பேர் இழப்பாகும்.

அன்னார் நான் அறிந்தகாலத்தில் இருந்து எமதுசமூகத்திற்கு எல்லாத்துறைகலிலும் கல்வி,சமய,கலாச்சார அம்சங்களில் மாற்றத்தினை கொண்டுவர வேண்டும் என்று கூறியதுமட்டுமன்றி தனதுவாழ்நாளில் நடைமுறைபடுத்தி காட்டியவர்.

மனிதர்களிடத்தில் எவ்வாறு அன்பாகவும் பண்பாகவும் பழகவேண்டும் என்று நான் அவரை சந்திக்கின்றபோதெல்லாம் என்னுடன் அவர்கள் பழகியவிதத்தை எனது வாழ்நாளில் ஒருபடிப்பினையாக எடுத்துக்கொண்டேன். 

கிண்ணியாவினுடைய வரலாறுபற்றி நன்கு அறிந்த ஒரு மூத்த மனிதர் இப்பிரதேசத்தை கல்வியிலும் சமய கலாச்சாரத்தில் மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்ற கனவினை நாங்கள் அனைவரும் எதிர்காலத்தில் பின்பற்றி நடைமுறைப்படுத்த திடசந்தர்பம் கொள்வோம்.

அன்னாரது சகல செயற்பாடுகளையும் அல்லாஹ் பொருந்திக்கொண்டு அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments